சிரைத்தல் என்றால் என்ன?
நமது குடும்பங்களில் ஒரு வேலையைச் சொல்லி அந்த வேலை தகுந்த நேரத்தில் நடக்க விட்டால், அந்த பணியை ஏற்றுக் கொண்டவரை , ஏன் இந்த வேலையை முடிக்கவில்லை, செரைக்க போனாரா? என்று கோபத்தில் கேட்பது உண்டு. கோவில்களில் மொட்டை எடுப்பவரை, சிரைத்து கொண்டு உள்ளார் என்று கூறுவோம்.
சிரைத்தல் என்றால் முடி கழித்தல்/மொட்டை அடித்தல்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
சிரை1
ciraittal,
4 செகுன்றாவி (v.t.)
1. மயிர் கழித்தல்; to shave.
காம்பறத் தலை சிரைத்து(திவ். திருமாலை. 38);.
2. செதுக்குதல்;
to cut with a sickle.
புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ(ஈடு.3,9, 6);.
ம. சிரய்க்குக;க. கெரெ, கிரி;தெ. கொருகுட;து. கெரெபுனி;பட கெரெ;கொலா. க்வர்க்;மா. க்வெரெ
AS: sceren; ஸ்சிரன்
OE: schere, ஸ்சிர்
E: shear ஸியர்
: L.G.: scheren; ச்சிரன்
Du: scheeren; ஸ்சீரன்
Ice: shera; சீர
Dan: shere; Yer: scheren.
மேலே உள்ள ஐரோப்பிய சொற்களில் "சிரை" "சிரா" தமிழ் சொற்களின் ஒலிச் சிதறல்கள் உள்ளன.
[சில் → சிறு → சிறாப், சில் → சிலும்பு → சிலாம்பு → சினாம்பு → சிறாம்பு = மரத்திலும்மீனிலுமுள்ள நுண்பட்டை. சில் → சி → சிராய், சிராய்த்தல் = உராய்ந்து, ஊறுபடுதல். சின் → சிர் → சிரை. சிரைத்தல் மேலுள்ளதை நீக்குதல், செதுக்குதல், மதுவித்தன்]
சிரை2 cirai, பெ. (n.)
நரம்பு (திவா.);; nerve, vein. Skt. sira
சிரை sirai, பெ. (n.)
குரங்கு (அகநி);; monkey. Skt. šira
சிரை3 cirai, பெ. (n.)
தாதுக்களினின்று கழிவுப் பொருட்களை வெளியேற்றும் அரத்தக் குழாய்கள்;any tube or vessal through which waste matters or secretions are discharged-duct (சாஅக.);.
Shear என்ற ஆங்கிலச் சொல் சிரை என்ற தமிழ் சொல்லில் இருந்து உருவாகி உள்ளது.
ஆனால் ஆங்கில வேர்ச்சொல் அகராதியில் shear என்ற சொல்லுக்கு "sker" என்ற சொல்லில் உருவானதாக நம்பப்படுகிறது.
shear (v.)
Middle English sheren, "cut or clip, especially with a sharp instrument," from Old English sceran, scieran (class IV strong verb; past tense scear, past participle scoren; Middle English shorne) "to cleave, hew, cut with a sharp instrument; cut (the hair), shave (the beard), shear (a sheep)," from Proto-Germanic *skero "to cut" (source also of Old Norse and Old Frisian skera, Dutch scheren, German scheren "to shear"), from PIE root *sker- (1)
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
கீறு1āṟudal,
செ.குன்றாவி.(v.t.)
1. வரிகீறுதல்; to draw lines.
2. எழுதுதல்; to scribble, make marks, write, engrave.
3. கிறுக்கியடித்தல்; to score out.
4.கிழித்தல்; to slit, tear, rend.
5. பறண்டுதல்; to scratch, as a cat, a fowl, to work over, as one's toes.
6. ஆய்தத்தால் அறுத்தல்;to cut, gash, lance, dissect.
புண்கீறிய குருதிப்புனல்(கம்பரா. பரசுராமப்);.9);
7. வகிர்தல்; to slice, cut off longitudinally.
8. குறிப்பித்தல்; to give a clue to, as a subject.
ம. கீறுக, கீளு குட. கீறு;து. கீறுனி;தெ. கீறு, கீயு, கீளு;துட., கோத. கீற்;கொலா. கீற;கொண்., பர். கீர்;கூ.கீர;பட கீயி,
Fln. kirjotta,FD. kiruttoa;
Es. kirjata, Mong. ziru, Q. qilqay.
[குல் → கில் → கில் → கீறு.]
Shear என்ற ஆங்கிலச் சொல் தமிழ் சொற்களான சிரை அல்லது கீறு வேர்ச்சொல்லாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழே உலகின் மூல மொழி
நன்றி வணக்கம்
Comments
Post a Comment