ஆப்கானிஸ்தான் வரை தமிழர்கள்
1 ) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தமிழ் பெயருள்ள ஊர்கள்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள தமிழ் ஊர்ப்பெயர்கள்.
போர் தமிழ், கொற்கை, பொதினே, சேரன், பாண்டி, கொற்கை போன்ற தமிழ் பெயருள்ள ஊர்கள் தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளன.
குன்று, தோன்றி, கொற்கை, நள்ளி, பாண்டிக்கோலி, மத்ரை, குடம், கொற்கை, தமுல், பனை, காவேரிவாலா, பாலை,
கள்ளுர், குட்டுவன் நலா, சேரன்வாலா, ஆமுர், காஞ்சி, சோலா, கிள்ளி, செலியன் வாலா, ஈளம் போன்ற தமிழ் பெயருள்ள ஊர்கள் தற்போதைய பாகிஸ்தான் நாட்டில் உள்ளன.
2) H - Haplogroup ஆய்வு
ஹாப்லாக் குழு H, குறிப்பாக H (M69), பெரும்பாலும் திராவிட மக்களுடன் தொடர்புடையது, குறிப்பாக தெற்காசியாவில். மற்ற குழுக்களிலும் காணப்பட்டாலும், இது திராவிட மொழி பேசுபவர்களிடையே ஒரு முக்கிய தந்தைவழி பரம்பரையாகும். ஹாப்லாக் குழு இந்தியா அல்லது சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது மற்றும் தெற்காசியாவில் அதிக அதிர்வெண்களில் காணப்படுகிறது, இதில் திராவிட வம்சாவளியைக் கொண்ட மக்கள்தொகை உட்பட.
H - Haplogroup என்பது பெரும்பாலும் திராவிட இனத்தவருக்கு உரியது. (50000 ஆண்டுகளுக்கு முன்னால்)
"H" Haplogroup பரவல், இந்த படத்தின் மூலம் தமிழர்கள் ஆப்கானிஸ்தான் வரை பரவி வாழ்ந்து உள்ளது அழகாக தெரிகிறது . Haplogroup Y குரோமோசோம் DNA என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு Y குரோமோசோம் கிடைக்கும். இது பல தலைமுறைக்கு மாறாது.
தெற்கு பகுதியில் அதாவது தற்போதைய தென் இந்தியாவில் மக்கள் மிக அடர்த்தியாக உள்ளது. வடக்கே செல்ல செல்ல அடர்த்தி குறைவாக காணப்படுகிறது. இதன் மூலம் தமிழர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்று உள்ளனர் என்பது தெரிகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஊர்ப்பெயர்களும், இந்த ஹாப்லாக் குழு H க்கும் தொடர்பு இருப்பதை நமக்கு தெளிவாக காட்டுகிறது.
3) திராவிட நாட்டின் எல்லைகள்.
மெக்சிகோ நாட்டின் அருங்காட்சியகத்தில் உள்ள பழைய உலக வரைபடத்தில், திராவிட நாட்டின் எல்லைகள்.
பழைய திராவிட நாடு வரை பரவிய தமிழ் மொழி, ஆனால் இன்று அந்த மொழி பிறந்த தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது, அது உலகில் பல ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் ஒரு மொழியாகும்.
திராவிட நாட்டின் பழைய உலக வரைபடம், அறிவியல் DNA ஆய்வு haplogroup H, மற்றும் ஆப்கானிஸ்தான் & பாகிஸ்தானில் உள்ள தமிழர்களின் ஊர்பெயர்கள் இவை அனைத்தும் தமிழர்கள் துருக்கி வரை வாழ்ந்து உள்ளனர் அதாவது தமிழர்கள் வட இந்தியா முழுவதும் வாழ்ந்து உள்ளனர் என்பது தெரிகிறது.
புராணக்கதைகள்.
இராமாயணம் என்ற கற்பனை புராண கதையில் கைகேயி, கேகய நாட்டு மன்னன் அச்வபதியின் மகள் ஆவார். அவர் கேகய நாட்டு இளவரசி என்பதால், கைகேயி என்று அழைக்கப்பட்டார். கேகய நாடு (Kekeya), பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு தற்கால ஆப்கானித்தான் நாட்டிற்கு வடக்கே கசக்கஸ்தானில் அமைந்திருந்தது. கேகய நாடு குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
மகாபாரதம் என்ற கற்பனை புராண கதையில் "காந்தாரி" என்ற பெண் நல்ல தமிழ் பண்பாட்டில் ஊறிய கதைப் பாத்திரம். அவள் பிறந்த இடம் காந்தகார் தற்போதைய ஆப்கானிஸ்தான். காந்தாரா என்பது பண்டைய இந்தியாவின் வடமேற்கில் அமைந்த ஒரு நாடு. இது தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பகுதிகளில் அமைந்திருந்தது. இது ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் கலாச்சார பிராந்தியமாகும். குறிப்பாக, மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் காந்தாரி இந்த நாட்டின் இளவரசியாகக் குறிப்பிடப்படுகிறாள்.
தற்போது உள்ள கன்னியாகுமரி முதல் துருக்கி நாட்டு வரை தமிழ் இன மக்கள் வாழ்ந்து தங்கள் தமிழ் பண்பாட்டை வளர்த்து உள்ளனர். தமிழ் மக்களின் வாய் வழக்கு கதைகளை, ஆரியப் பிராமணர்கள் காமக் கதைகளை சேர்ந்து உண்மையில் நடந்த வரலாறு போல் சித்தரித்து தங்கள் வாழ்க்கையை வளர்ச்சி கொள்ளச் செய்து உள்ளனர்.
ஆரியன் தமிழ் இனத்தின் எல்லையை சுருக்கி விட்டான். கவனம் இல்லாவிட்டால் இன்னும் சுருங்க வேண்டிய நிலை வரும்.
Comments
Post a Comment