R1b Haplogroup ன் சிறப்பு என்ன ?
இது ஒரு ஆய்வு பதிவு.திராவிட இனத்தின் சிறப்பை இதன் மூலம் அறியலாம்
இந்தியாவில் எப்படி திராவிடர்கள் தெற்கே அதிகம் உள்ளனரோ
அதுபோல தெற்கு ஐரோப்பாவில் R1b Haplogroup மக்கள் அதிகம்.
இந்தியாவில் தெற்கே தமிழர்களால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் தாயாக உள்ளது.
அதுபோல தெற்கு ஐரோப்பாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் மிஞ்சிய தமிழ்ப் பழங்குடியினரின் வளர்ச்சியால் உருவான இலத்தின்/கிரேக்கம் மொழி ஐரோப்பிய மொழிகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்களுக்கு வேர் தமிழில் உள்ளது. அதற்கு காரணம் நமது ஆதி தமிழ்ப்பழங்குடியினர் ஐரோப்பியர்களுடன் கலந்த காரணத்தால் ஐரோப்பிய மொழிகளில் தமிழ் ஒலி ஒலித்து கொண்டு இருக்கிறது.
H - Haplogroup என்பது பெரும்பாலும் திராவிட இனத்தவருக்கு உரியது. ( 50000 ஆண்டுகளுக்கு முன்னால்)
இந்த படத்தின் மூலம் தமிழர்கள் ஆப்கானிஸ்தான் வரை பரவி வாழ்ந்து உள்ளது அழகாக தெரிகிறது
Haplogroup Y குரோமோசோம் DNA என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு Y குரோமோசோம் கிடைக்கும். இது பல தலைமுறைக்கு மாறாது. அதே சமயத்தில் தட்பவெப்ப நிலையாலும், மக்கள் வாழும் முறையாலும், இனக் கலப்பாலும், வருடங்கள் அதிகமானலும் Y குரோமோசோமின் இயல்பு மாறுபடுகிறது. வேற்றுமைகள் அதிகம் அடைந்தால் அதை ஒரு தனி Haplogroup ஆக கணக்கீடு செய்கின்றன
இந்த H haplogroup இன் தலைமுறை வடக்கே உரோசியா சென்ற போது அதன் Y குரோமோசோம் மாறி மாறி பல புதிய Haplogroup, I J K … R வரை உருவாகியது . இந்த R haplogroup இரண்டாக பிரித்தது . அதில் ஒன்று R1a மற்றொன்று R1b.
இந்த இரண்டு பிரிவுகளின் தன்மையை ஆய்வு செய்தால் R1a haplogroup மக்கள் மனிதாபிமானமற்றவர்கள். R1b மக்கள் சற்று மனிதாபிமானராவர்களாக தெரிகின்றனர்.
R1a haplogroup ஒரு பிரிவினர் வடக்கு ஐரோப்பாவில் குடியேறினர். மற்ற ஒரு பிரிவினர் வட இந்தியாவில் குடியேறினர்.
R1b பிரிவினர் தெற்கு ஐரோப்பாவில் குடியேறினர்.
R1b பிரிவினர், திராவிட இனத்தைச் சார்ந்த சிந்து வெளி பெண்களுடன் (H haplogroup ) கலந்து ஒரு கலப்பின Haplogroup உருவாகியது. அதாவது H (mtdna)- R1b அல்லது Haplogroup Hg1 உருவாகி உள்ளது.
Haplogroup Hg1- மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ தாய்வழியாகப் பெறப்படுகிறது, அதாவது இது தாய்மார்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது, இது தாய்வழி வம்சாவளியைக் கண்டறிய ஒரு பயனுள்ள கருவியாக அமைகிறது.
தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் தற்போதுள்ள பெரும்பாலான Mtdna எல்லைகள், உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களால் ஐரோப்பாவின் ஆரம்பக் குடியேற்றத்தின் Hg1 haplogroup உருவாகி இருக்கலாம்
Hg1 என்பது மேற்கு ஐரோப்பாவில் மிகவும் பொதுவான ஹாப்லாக் குழுவாகும், இது அயர்லாந்து, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ், மேற்கு வேல்ஸ், பிரான்சின் அட்லாண்டிக் விளிம்பு, பாஸ்க் நாடு மற்றும் கேடலோனியாவில் 80% க்கும் அதிகமான மக்கள்தொகையை அடைகிறது.
Hg1Haplogroup மேற்கு ஆசியாவில் தோன்றியதாக ஈரான் மற்றும் அனடோலியா -காகசஸ் கருதப்படுகிறது.
ஆரம்ப பரவல் R1b ஆனது 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த பனி யுகத்திற்குப் பிறகு மேற்கு ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவத் தொடங்கியது.புதிய கற்காலம் மற்றும் வெண்கல வயது புதிய கற்காலத்தில் விவசாயத்தின் வருகையுடன் 4000 முதல் 5000 ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஹாப்லாக் குழுமம் பரவலாக பரவியது.
Italy, France, Spain & Portugal போன்ற நாடுகளில் உள்ள அரச குடும்பத்தினர் பெரும்பாலும் Hg1 haplogroup ஐ சேர்ந்தவர்கள்.
H (mtdna) - R1b = Hg1
Kings & Queens of France
All kings of France supposedly belonged to haplogroup R1b-Z381 (Y-DNA).
Ingeborg of Denmark, Queen of France (1175-1236) => Z1a (mtDNA)
Francis I (1494-1547) => U5b* (mtDNA)
Henry IV (1553-1610) => R1b-Z381 (Y-DNA) U5b* (mtDNA)
Marie de' Medici (1575-1642) => H (mtDNA)
Louis XIII (1601-1643) => R1b-Z381 (Y-DNA) H (mtDNA)
Maria Theresa of Spain (1638-1683) =>. H(mtDNA)
Louis, Dauphin of France (1661–1711) => R1b-Z381 (Y-DNA) H (mtDNA)
Louis XV (1710-1774) => R1b-Z381 (Y-DNA) H (mtDNA)
Louis XVI (1754-1793) => R1b-Z381 (Y-DNA) N1b (mtDNA)
Marie-Antoinette (1755-1793) =>
H3 (mtDNA)
Louis XVII (1785-1795) => R1b-Z381 (Y-DNA) H3 (mtDNA)
Louis XVIII of France (1755-1824) => R1b-Z381 (Y-DNA) N1b (mtDNA)
Charles X of France (1757-1836) => R1b-Z381 (Y-DNA) N1b (mtDNA)
Emperors & Empress of France
Napoleon I (1769-1821) => E-M34 (Y-DNA) H (mtDNA)
Marie Louise of Austria (1791-1847) =>
H3 (mtDNA)
Napoleon II (1811-1832) => H3 (mtDNA)
Kings & Queens of the French
Maria Amalia of the Two Sicilies (1782-1866) => H3 (mtDNA)
Kings of Italy
Victor Emmanuel II (1820-1878) =>
H3 (mtDNA)
Grand Duke of Tuscany
Archduchess Joanna of Austria (1547–1578) => H (mtDNA)
Ferdinando II de' Medici (1610-1670) =>
H (mtDNA)
Charles Emmanuel III of Sardinia (1701-1773) => H (mtDNA)
Maria Christina of the Two Sicilies (1779–1849) => H3 (mtDNA)
Maria Theresa of Tuscany (1801-1855) => H3 (mtDNA)
Kings & Queens of Spain
Philip I of Castile, King of Castile and ruler of the Burgundian Netherlands => U5b* (mtDNA)
Margaret of Austria (1584–1611) =>
H (mtDNA)
Philip IV (1605-1665) => H (mtDNA)
Elisabeth of France (1602–1644) =>
H (mtDNA)
Mariana of Austria (1634-1696) =>
H (mtDNA)
Charles II (1661-1700) => H (mtDNA)
Marie Louise of Orléans (1662-1689) =>
H (mtDNA)
Maria Luisa of Savoy (1688-1714) =>
H (mtDNA)
Ferdinand VI (1713-1759) => H (mtDNA)
Maria Amalia of Saxony (1724-1760) => N1b (mtDNA)
Charles IV of Spain (1748-1819) => N1b (mtDNA)
Maria Josepha of Saxony (1803-1829) => H3 (mtDNA)
Isabella II (1830-1904) => H (mtDNA)
Alfonso XII (1857-1885) => H (mtDNA)
Victoria Eugenie of Battenberg (1887-1969) => H (mtDNA)
Sofia (193:cool: => H (mtDNA)
Felipe, Prince of Asturias (196:cool: =>
H (mtDNA)
Kings & Queens of Portugal
Maria II (1819-1853) => H (mtDNA)
Pedro V (1837-1861) => H (mtDNA) R1b-U106 (Z305+) (Y-DNA)
Luís I (1838-1889) => H (mtDNA) R1b-U106 (Z305+) (Y-DNA).
மேலே உள்ள அரச குடும்பத்தினரின் DNA கொண்டு அங்கு வாழ்ந்த மக்களும் இதே DNA வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியலாம்.
திராவிடர்களின் சிறப்பு பண்புகள்
1)விவசாயத்தில் திறன் பெற்றவர்கள்
2) கால் நடை வளர்ப்பில் சிறந்தவர்கள்
3) உலகின் மூல மொழி தமிழை அறிந்தவர்கள்
4) திராவிடர்கள் வாழும் பகுதி கடலால் சூழப்பட்ட தீபகற்பம். அதனால் அவர்கள் கடல் வழி கண்டு பல நாடுகளுக்கு கடல் வாணிகம் செய்தனர்.
5) பண்பாட்டில் சிறந்தவர்கள்
6) கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.
R1b Haplogroup ம், திராவிட
H-haplogroupம் கலப்பு முறை கலப்பு ஏற்பட்டதால் ஒரு சிறப்பான Hg1 Haplogroup உருவாகி உள்ளது. இந்த குருப்புக்கு திராவிடர்களின் சிறப்பு பண்புகள் இயற்கையாக சேர்ந்த காரணத்தால் ஐரோப்பா பல சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு வழி உருவானது.
H (mtdna) - R1b Haplogroup ஆல் ஐரோப்பாவில் நடந்த முன்னேற்றங்கள்.
1)ஐரோப்பாவில் விவசாயம் சிறப்பான வளர்ச்சி
2) கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம்
3) லத்தின்/ கிரேக்கம் மொழி இவர்களால் உருவாக்கம்
4) பல நாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிப்பு
5) கிருத்துவ மதம் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்தவர்கள் .
பண்பாடு
பண்பாட்டில் சிறந்த காரணத்தால் மூர்க்கத்தனம் குறைந்து, மனிதாபிமானம் நிறைந்து காரணத்தால் ஆரியர்களிடம் திராவிடர்கள் தோற்றது போல் ஜெர்மனிடம், உரோம் பேரரசு தோற்றது.
இந்து ஐரோப்பிய மொழி
இந்து ஐரோப்பிய மொழி துருக்கி நாட்டில் அனட்டொலியா என்ற பகுதியில்தான் உருவாக்கம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
திராவிடர்களும், உரேசியர்களும், மற்றும் ஈரானியர்களும் சந்திக்கும் இடமாக திகழ்கிறது. இங்கு பல ஆதி பழங்குடிகள் பல்கி பெருகி, விவசாயம் அறிந்து பின் 3000/4000 ஆண்டுகளுக்கு பின் தெற்கு ஐரோப்பாவில் பரவ தொடங்கி உள்ளனர். முதலில் கிழக்கு ஐரோப்பா பகுதியில் உள்ள கிரிஸ் நாட்டில் கிரேக்கத்தை உருவாக்கம் செய்தனர்
கிரேக்கம்
(நவீன கிரேக்கம்: Ελληνικά, ரோமானியமயமாக்கப்பட்டது: Elliniká; பண்டைய கிரேக்கம்: Ἑλληνική, ரோமானியம்: Hellēnikḗ) இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு சுயாதீனமான கிளை ஆகும், இது கிரீஸ், சைப்ரஸ், அல்பேனியா மற்றும் பால்கனின் பிற பகுதிகளைத் (கருங்கடல் கடற்கரை மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல்) தாயகமாகக் கொண்டது. எந்தவொரு இந்தோ-ஐரோப்பிய மொழியையும்விட மிக நீண்ட ஆவணப்படுத்தல் வரலாற்றைக் கொண்டுள்ளது. இது குறைந்தது 3,400 ஆண்டுகள் எழுதப்பட்ட பதிவுகளில் உள்ளது. அதன் எழுத்து முறை கிரேக்க அகரவரிசை எழுத்துக்கள் ஆகும், இது சுமார் 2,800 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
இலத்தீன்
ஆதிப் பழங்குடிகள் அதன் பின்னர் மேற்கே பரவி ரோமிலும் அதன் வடக்கு பகுதியிலும் பரவி உள்ளனர். ரோமில் இலத்தீன் மொழி உருவாக்கம் செய்தனர்.
இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், இடைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன் (Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெலிடிக்குமொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது.
திரு. தமிழ் செல்வா அவர்கள் இத்தாலியில் வாழ்ந்தவர். அங்கு தமிழ் ஒலி எவ்வாறு ஒலிக்கிறது என்ற அழகாக படம் பிடித்து எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள கருத்துகளின் படி, தமிழ் அறிந்து மக்கள் அங்கு இல்லாவிட்டால் (கிரிஸ், இத்தாலி) கிரேக்கமும், இலத்தீனும் உருவாக வாய்ப்பே இல்லை என்பது தெரியும்.
இரண்டு மொழியும் ( கிரேக்கம் /இலத்தீன்) இயற்கையான முறையில் தோன்றிய மொழி ல்ல. பல தரப்பட்ட குழுக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய மொழிகள். அதனால் இந்த இரண்டு மொழிகளும் தகுந்த அரசியல் அமைப்பு அமையாத காரணத்தால் அழிந்து விட்டன. மேலும் மக்களின்/இனத்தின் இரத்தத்தில் தமிழ் மொழி கலந்தது போல் கலக்கவில்லை.
கிருத்துவ மதம் :
ரோம பேரரசு கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை தெற்கு ஐரோப்பா (கிரிஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அயர்லாந்து) முழுவதும் அதாவது 700 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இக்காலத்தில் கிருத்துவ மதம் தோன்றி வளர்ந்து கொண்டு இருந்தது. கிருத்துவ மதம் பன்முக வளர்ச்சி பெற ரோம் பேரரசு பல வழிகளில் உதவியது. இதன் மூலம் உலகம் முழுவதும் கிருத்துவ மதம் பரவ திராவிட இன தலைமுறைகள் உதவி இருக்கிறது என்பதை அறியலாம்.
சமத்துவம்
கிரிஸ் மற்றும் உரோம் ஆட்சியில் சமத்துவத்தை நிலைநாட்டி குடியரசு அமைப்பு ஆட்சி நடந்தது.
கடல் வழி
ஆதிப் பழங்குடிகள் இத்
தாலியில் பரவியது போல் பிரான்ஸ் ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஸ்காட்லாந்து அயர்லாந்து போன்ற இடங்களில் பரவி வாழ்ந்தனர். ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த மக்கள் பல கடல் வழி கண்டு பல கண்டங்களை
க் கண்டு பிடித்து அங்கு குடியெற்றம்செய்தனர். மேலும் கடல் வாணிகம் செய்து, பல நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். திராவிட இனத்தின் கடல் வழித் திறன் இருந்த காரணத்தால் இடம் மக்களும் அந்த தொழிலை திறம் பட செய்து உள்ளனர்
என்பது தெரிகிறது.
கவுல் ( Gaul)
இந்த Gaul என்ற கலாட்டிய மக்கள் தமிழ் ஒலி வடிவம் தெரிந்தவர்கள் தமிழ் வரி வடிவம் தெரியாதவர்கள் இந்த மக்கள் Hg1 haplogroup குருப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் பிரான்ஸ் நாட்டில் அதிகம் வாழ்கின்றனர்.
திரு.சேவியர் ரூர்ட்
பிராஞ்ச் ஆராய்ச்சியாளர், தற்போது கவுல்ஸின் தோற்றம் குறித்து பணியாற்றி வருகிறார். அவர் கோல்கள், ஸ்லாவ்கள், திராவிடர்கள் மற்றும் புருஷோக்களுக்கு இடையே மொழியியல் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
மொழி மற்றும் Hapolac Group DNA பகு
ப்பாய்வு மூலம் திராவிடர்களுக்கும் , கவுல் ( Gaul) இனத்திற்கும் தொடர்பு உள்ளதை அழகாக விளக்கியுள்ளார். கிழ்கண்ட லிங் மூலம் கவுல் இனத்தினர் தமிழ் மொழி அறிந்து உள்ளனர் என்பதையு
ம் திரு .சேவியர் ருர்ட் ன் விளக்கத்தை அறியலாம்.
உலக மக்கள் தொகையில்
இந்த H (mtdna) - R1b Haplogஆroup ன் சிறப்பான குணங்களால் இந்த குருப்பின் மக்கள் தொகை உலகில் அதிகமாக உள்ளது. இந்த மரபணுவை சிறப்பான மரபணுவாக கருதுகின்றனர்.
மேலே உள்ள படத்தில் R1b Haplogroup மக்கள் 24.6 % சதவீதம் உள்ளனர்.
இந்த ஆய்வைச் செய்ய தூண்டியவர்கள்
பாவாணர்
தமிழ் செல்வா
சேவியர் ருர்ட்
பாவாணர் அவர்கள் தமிழ் வேர்ச்சொல் ஆய்வின் மூலம் ஆரியர்களை, சென்றவன் திரும்பி மனிதாபிமானமற்ற, நயவஞ்சக மனதுடன் திரும்ப வந்து உள்ளான் என்று எந்தவித Haplogroup அறிவியல் முறை இல்லாமல் இருந்த காலத்திலேயே அறிதியிட்டு கூறினார். மேலும் சென்றவன் தான் அறிந்த தமிழ் மூலம் இந்து ஐரோப்பிய மொழி உருவாக உதவினான் என்று. அவர் அன்று சொன்ன கருத்துகள் அறிவியல் பூர்வமாக இன்று நிருபணம் ஆகி உள்ளது. இதை ஐரோப்பியர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் Hg1 haplogroup பில் பிறந்த மக்கள் ( சேவியர் ருர்ட்) தங்கள் முற்கால தலைமுறையை அறிய திடமான ஆய்வுகள் செய்து வருகின்றனர். இதுபோன்ற ஆய்வு உண்மை நிலையை நிலை நிறுத்தும்.
தமிழ் செல்வா அவர்கள் இத்தாலியில் வாழ்ந்தவர். ஐரோப்போ முழுவதும் தமிழே என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தார். அவரின் எழுத்தை அறிந்த பின்னும், பாவாணர் வேர்ச்சொல் ஆய்வு வழிகாட்டல் மூலமும், எனது ஆங்கிலச் சொல்லின் ஆய்வு மூலமும், எனது மனம் திடமாக நம்பியது கிரிஸ் அல்லது உரோம் நாடுகள் பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்க வேண்டும் அல்லது தமிழ் தெரிந்தவர்கள்அங்கு இருந்திருக்க வேண்டும் என்று. இந்த ஆய்வின் மூலம் நமது தமிழ் பழங்குடி மக்கள் ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சிக்கு சொற்களை அள்ளி கொடுத்து வளர்த்து உள்ளனர் என்பது நன்கு புலப்படுகிறது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தமிழே உலகின் மூல மொழி
Comments
Post a Comment