இது ஒரு ஆய்வு பதிவு.திராவிட இனத்தின் சிறப்பை இதன் மூலம் அறியலாம் இந்தியாவில் எப்படி திராவிடர்கள் தெற்கே அதிகம் உள்ளனரோ அதுபோல தெற்கு ஐரோப்பாவில் R1b Haplogroup மக்கள் அதிகம். இந்தியாவில் தெற்கே தமிழர்களால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் தாயாக உள்ளது. அதுபோல தெற்கு ஐரோப்பாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் மிஞ்சிய தமிழ்ப் பழங்குடியினரின் வளர்ச்சியால் உருவான இலத்தின்/கிரேக்கம் மொழி ஐரோப்பிய மொழிகளுக்கு தாயாக உள்ளது. ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்களுக்கு வேர் தமிழில் உள்ளது. அதற்கு காரணம் நமது ஆதி தமிழ்ப்பழங்குடியினர் ஐரோப்பியர்களுடன் கலந்த காரணத்தால் ஐரோப்பிய மொழிகளில் தமிழ் ஒலி ஒலித்து கொண்டு இருக்கிறது. H - Haplogroup என்பது பெரும்பாலும் திராவிட இனத்தவருக்கு உரியது. ( 50000 ஆண்டுகளுக்கு முன்னால்) இந்த படத்தின் மூலம் தமிழர்கள் ஆப்கானிஸ்தான் வரை பரவி வாழ்ந்து உள்ளது அழகாக தெரிகிறது Haplogroup Y குரோமோசோம் DNA என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு Y குரோமோசோம் கிடைக்கும். இது பல தலைமுறைக்கு மாறாது. அதே சமயத்தில் தட்பவெப்ப நிலையாலும், மக்கள் வாழும் முறையாலும், இனக் கலப்ப...
துருத்தியூதுதல், வினைச்சொல். (துருத்தி+ஊது+தல்) உலையூது கருவியாற் காற்றெழுப்புதல் துருத்திவாத்தியம் ஊதுதல் ஒத்துப்பாடுதல் (உள்ளூர் பயன்பாடு) To blow the bellows To play on a bass-pipe To echo another's words, to imitate the words or opinions of a person obsequiously. கொல்லர் துருத்தி இரும்பு போன்ற உலோகங்களை உருக்குதல், ஒட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உயர்ந்த வெப்பநிலை தேவை. துருத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது சாத்தியமானது. துருத்திகள் எரிபொருளுக்குக் கூடுதலான வளியை வழங்கி அது எரியும் வேகத்தைக் கூட்டுவதன்மூலம் அதிக வெப்பத்தை உருவாக்க் உதவுகிறது. ஈரறை உலைத் துருத்தி பொதுவாகக் கொல்லர் உலைகளில் காற்று வழங்குவதற்குப் பயன்படும் துருத்திவகை இது. சீரான அளவில் காற்று வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளதாலேயே இது பெரிதும் விரும்பப்படுகிறது. இதன் அமைப்பு கணப்புத் துருத்திகளைப் போலவே இருந்தாலும், இதில் இரண்டு அறைகள் இருப்பது ஒரு வேறுபாடு ஆகும். மடிப்புப் பக்கங்களைக் கொண்ட துருத்தியறை நடுவில் பிரிதகடு ஒன்றினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு அறைக்குள் செலுத்தப்படும் வளி மறு அறைக்குள் சென்...
நமது குடும்பங்களில் ஒரு வேலையைச் சொல்லி அந்த வேலை தகுந்த நேரத்தில் நடக்க விட்டால், அந்த பணியை ஏற்றுக் கொண்டவரை , ஏன் இந்த வேலையை முடிக்கவில்லை, செரைக்க போனாரா? என்று கோபத்தில் கேட்பது உண்டு. கோவில்களில் மொட்டை எடுப்பவரை, சிரைத்து கொண்டு உள்ளார் என்று கூறுவோம். சிரைத்தல் என்றால் முடி கழித்தல்/மொட்டை அடித்தல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி சிரை1 ciraittal, 4 செகுன்றாவி (v.t.) 1. மயிர் கழித்தல்; to shave. காம்பறத் தலை சிரைத்து(திவ். திருமாலை. 38);. 2. செதுக்குதல்; to cut with a sickle. புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ(ஈடு.3,9, 6);. ம. சிரய்க்குக;க. கெரெ, கிரி;தெ. கொருகுட;து. கெரெபுனி;பட கெரெ;கொலா. க்வர்க்;மா. க்வெரெ AS: sceren; ஸ்சிரன் OE: schere, ஸ்சிர் E: shear ஸியர் : L.G.: scheren; ச்சிரன் Du: scheeren; ஸ்சீரன் Ice: shera; சீர Dan: shere; Yer: scheren. மேலே உள்ள ஐரோப்பிய சொற்களில் "சிரை" "சிரா" தமிழ் சொற்களின் ஒலிச் சிதறல்கள் உள்ளன. [சில் → சிறு → சிறாப், சில் → சிலும்பு → சிலாம்பு → சினாம்பு → சிறாம்பு = மரத்திலும்மீனிலுமுள்ள நுண்பட்டை. சில் → சி → சிராய், சிர...
Comments
Post a Comment